உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சத்யசாய் பாபா நுாற்றாண்டு விழா சிறப்பு ஹோமங்களுடன் வழிபாடு

சத்யசாய் பாபா நுாற்றாண்டு விழா சிறப்பு ஹோமங்களுடன் வழிபாடு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சத்யசாய் சேவா சமிதியில், பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபாவின், நுாற்றாண்டு விழா மற்றும், 101வது பிறந்த நாள் விழா நடந்தது. பொள்ளாச்சி வெங்கடேசா காலனி ஸ்ரீவாரி கார்டனில், சத்யசாய் சேவா சமிதியில், சத்யசாய் பாபாவின் நுாற்றாண்டு விழா மற்றும், 101வது பிறந்த நாள் விழா கடந்த, 17ம் தேதி துவங்கியது. ஓம்காரம், சுப்ரபாரதம், நகர சங்கீர்த்தனம், பிரசாந்தி கொடியேற்றுதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா துவங்கியது. தினமும், சாய் பஜன், மங்கள ஆரத்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்றுமுன்தினம் வேதபாராயணம், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், மங்கள ஆராத்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று காலை, 5:20 மணிக்கு ஒம்காரம், சுப்ரபாரதம், நகர சங்கீர்த்தனம், காலை, 9:30 மணிக்கு சுயம்வர பார்வதி கலா ேஹாமம், சந்தான கோபால ேஹாமம், ஆயுள் விருத்தி ேஹாமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. காலை, 11:00 மணிக்கு சாய் பஜனையும், குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கல் நிகழ்ச்சியும் நடந்தது. மதியம், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், சாய் பஜன், சத்சங்கம் நிகழ்ச்சியும், மங்கள ஆரத்தி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !