மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
அன்னுார்; அன்னுாரில், கல்லூரி மாணவ, மாணவியருக்கு, ஸ்ரீ பளஞ்சிகா கல்வி அறக்கட்டளை உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில், கலை அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், பொறியியல் மற்றும் முதுகலை மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், என 18 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இத்துடன் பி.எம்.என். அறக்கட்டளை சார்பில், தலா 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. விழாவில் அறக்கட்டளை தலைவர் லோகநாதன், செயலாளர் சந்திர சேகரன், உட்பட பலர் பங்கேற்றனர்.