உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர்; சுகாதாரம் கடும் பாதிப்பு!

தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர்; சுகாதாரம் கடும் பாதிப்பு!

ரோட்டோரத்தில் கழிவு நீர்

பொள்ளாச்சி --- கோவை ரோடு, சேரன் நகர் பகுதியில் ரோட்டோரத்தில் கழிவு நீர் வழிந்து ஓடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, கழிவுநீர் வெளியேறுவதை உடனடியாக தடுத்து, சுகாதாரத்தை பாதுகாக்கவும், கால்வாய் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- அருண், பொள்ளாச்சி.

ரோடு சேதம்

மடத்துக்குளம் நால்ரோட்டில், மேற்புறம் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுவதுடன், அவ்வப்போது விபத்தும் ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் இதை கவனித்து சரி செய்ய வேண்டும்.-- சிவா, மடத்துக்குளம்.

வீணாகும் தண்ணீர்

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, ரோட்டோரத்தில் குழாயில் கசிவு ஏற்பட்டு ரோட்டில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், சர்வீஸ் ரோட்டில் மக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. மற்றும் கொசு தொல்லையும் அதிகரிக்கிறது. குழாயில் நீர் கசிவை பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும்.- விக்னேஷ், கிணத்துக்கடவு.

மின்விளக்கு அமைக்கணும்!

கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் செல்லும் வழியில், மின்விளக்கு இல்லாததால் அப்பகுதி முழுவதும் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், அப்பகுதியில் பாம்புகள் அதிகளவு உள்ளதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி, இங்கு விரைவில் மின் விளக்கு அமைக்க வேண்டும்.- கண்ணன், கிணத்துக்கடவு.

ரவுண்டானாவை பராமரிக்கணும்!

பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் 'வாக்கிங்' செல்பவர்கள் சிலர் அவ்வப்போது, ரவுண்டானா அருகே உணவு பொருள் சாப்பிட்டு, அதன் குப்பையை நடைபாதை ஓரத்தில் கொட்டி செல்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- டேவிட், பொள்ளாச்சி.

குடிநீர் தட்டுப்பாடு

உடுமலை நகராட்சி யு.எஸ்.எஸ்., காலனி குடிநீர் குழாயில் தண்ணீர் எப்ப வரும் என காலி குடத்துடன் நீண்ட நேரம் மக்கள் காத்திருக்கின்றனர். எனவே, குடிநீர் குழாயில் சீராக தட்டுப்பாடின்றி வருவதற்கு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கண்ணன், உடுமலை.

நடைபாதை சேதம்

உடுமலை பஸ் ஸ்டாண்ட் பின்புறம் பைபாஸ் ரோட்டில் நகராட்சி சார்பில் பயணியர் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நடைபாதை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், பயணியர் அதில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இதை நகராட்சியினர் சரி செய்ய வேண்டும்.- முருகன், உடுமலை.

மக்கள் அச்சம்

உடுமலை, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள நிழற்கூரை 'குடிமகன்'களின் இளைப்பாறும் இடமாக உள்ளது. பயணிகள் நிழற்கூரையை பயன்படுத்த முடியாமல் வெளியில் நின்று காத்திருக்கின்றனர். மாலை நேரங்களில் பஸ்சுக்கு காத்திருக்கம் பயணிகளுக்கும் பாதுகாப்பில்லாத நிலையில் அச்சப்படுகின்றனர்.- ராஜேஸ்வரி, உடுமலை.

சுகாதார சீர்கேடு

உடுமலை, பள்ளபாளையம் நால்ரோட்டிலிருந்து கிராமத்திற்குள் செல்லும் ரோட்டில் குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கழிவுகள் காற்றில் பறந்து அப்பகுதி முழுவதும் பரவுவதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.-திலகம், பள்ளபாளையம்.

சிதிலமடைந்த மூடி

உடுமலை பசுபதி வீதி, கல்பனா ரோடு சந்திப்பில் பாதாள சாக்கடை ஆள் இறங்கு குழியின் மூடி சிதிலமடைந்து நிலையாக இல்லாமல் ஆடிக்கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் கீழே உடைந்து விழும் நிலையில் உள்ளது. மூடி இவ்வாறு நிலையில்லாமல் ஆடுவது வாகன ஓட்டுநர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மேலும் வாகனங்கள் அதன் மீது செல்வதும் ஆபத்தான சூழலாகவே உள்ளது.- கண்ணன், உடுமலை.

விதிமீறும் வாகனங்கள்

உடுமலை, தாராபுரம் ரோடு, சிவசக்தி காலனி அருகே ரோட்டின் வளைவில் வாகனங்கள் அதிவேகமாக திரும்புவதால் மற்ற வாகனங்கள் கடந்து செல்லும்போது அடிக்கடி தடுமாறுகின்றனர். இதனால் அப்பகுதியில் விபத்துகளும் அதிகரிக்கிறது. விபத்துகளை கட்டுபடுத்த வேகத்தடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.-மணிமேகலை, உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை