குறுமைய விளையாட்டுஎஸ்.வி.ஜி.வி. பள்ளி சாதனை
மேட்டுப்பாளையம்: காரமடை அருகே புஜங்கனுாரில், அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், குறுமைய விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. இதில், காரமடை எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்றனர். மாணவர்களுக்கான கேரம் போட்டி, 19 வயது ஒருவர் பிரிவில் முதலிடம், இருவர் பங்கேற்கும் போட்டியில் இரண்டாமிடம், 17 வயது மாணவியர் பிரிவில் இருவர் பங்கேற்கும் கேரம் போட்டியில் முதலிடம், 14 வயது பெண்கள் டேபிள் டென்னிஸ் இருவர் பங்கேற்கும் போட்டியில் முதலிடம், 19 வயது பெண்கள் பிரிவில் ஒருவர் மற்றும் இருவர் பங்கேற்கும் போட்டியில் முதலிடம், 17 வயது ஒருவர் மற்றும் இருவர் மாணவியர் பிரிவில் முதலிடம் பெற்றனர். மாணவர்களுக்கான பீச் வாலிபால் போட்டியில், 14, 17, 19 வயது பிரிவு போட்டிகளில் முதலிடம், மாணவியருக்கான 14 மற்றும் 19 வயது பிரிவு போட்டியில் முதலிடம், 19 வயது மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில் முதலிடம், மாணவியருக்கான 14, 17, 19 வயது பிரிவு மூன்று போட்டிகளிலும் முதலிடம் பெற்றனர். மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில், 14, 17, 19 ஆகிய மூன்று வயது பிரிவுகளில் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, தாளாளர் பழனிசாமி, முதல்வர் சசிகலா, செயலாளர் ராஜேந்திரன், பள்ளி நிர்வாக அலுவலர் சிவ சதீஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.