உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  எஸ்.ஐ. பணி தேர்வு; 860 பேர் ஆப்சென்ட்

 எஸ்.ஐ. பணி தேர்வு; 860 பேர் ஆப்சென்ட்

- நமது நிருபர் -: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, காவல்துறைக்கு, 1,352 எஸ்.ஐ.கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தவர்களுக்கு, ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு, தமிழகம் முழுதும் எழுத்து தேர்வு நேற்றுமுன்தினம் நடந்தது. திருப்பூர் மாநகரில், இரு மையங்களில் தேர்வு நடந்தது. ஜெய்வாபாய் பள்ளியில் நடந்த தேர்வை, 853 பேர் எழுதினர். 340 பேர் தேர்வுக்கு வரவில்லை. கொங்கு பள்ளியில் நடந்த தேர்வை, 979 பேர் எழுதினர். 520 பேர் தேர்வுக்கு வரவில்லை. மொத்தம், 860 பேர் 'ஆப்சென்ட்' ஆயினர். காலையில், முதன்மை தேர்வும், மதியம், தமிழ் மொழி தகுதி தேர்வும் நடந்தது. தேர்வையொட்டி, இரு மையங்களில், ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ