உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவாணி நீர் மட்டம் 37.82 அடியாக உயர்வு

சிறுவாணி நீர் மட்டம் 37.82 அடியாக உயர்வு

கோவை: சிறுவாணி அணை அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், 17 முதல் மழை பெய்து வருகிறது. அதற்கு முந்தைய நாள் 16ம் தேதி அணை நீர் மட்டம், 36.51 அடியாக இருந்தது. ஐந்து நாட்களாக தொடர்ந்து மழை காணப்படுவதால், நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. தீபாவளி பண்டிகை (20ம் தேதி) தினத்தன்று அணை பகுதியில் 37 மி.மீ., அடிவாரத்தில் 49 மி.மீ., பதிவானது. நேற்றைய தினம் (21ம் தேதி) அணையில் 16 மி.மீ., அடிவாரத்தில் 13 மி.மீ., பதிவானது. குடிநீர் தேவைக்காக 9.21 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழையளவு: பீளமேடு - 6.70, வேளாண் பல்கலை - 27.20, பெ.நா.பாளையம் - 32, பில்லுார் அணை - 19, கோவை தெற்கு - 12, சூலுார் - 26.40, தொண்டாமுத்துார் - 10, போத்தனுார் - 8.80 மி.மீ., பதிவானது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சித்திரைச்சாவடி அணைக்கட்டு, குனியமுத்துார் அணைக்கட்டு வழியாக வினாடிக்கு, 750 கன அடி தண்ணீர் செல்கிறது. குளங்களுக்கு செல்லும் நீர் வழங்கு வாய்க்கால் வழியாக வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் செல்லும் தண்ணீரின் அளவை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ