தெற்காசிய மூத்தோர் தடகள போட்டி; கோவையில் இருந்து 143 பேர் களம்
கோவை; கர்நாடகாவில் நடக்கும் தெற்காசிய மூத்தோர் தடகள ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், கோவையில் இருந்து, 143 பேர் பங்கேற்கின்றனர்.கர்நாடக மாநிலம், மங்களூரில் முதலாவது தெற்காசிய மூத்தோர் தடகள ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி (நாளை) 10 முதல், 12ம் தேதி வரை நடக்கிறது. இதில், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் இடம்பெறுகின்றன.இதில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் வீரர், வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். தமிழக அணி சார்பில், கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தை சேர்ந்த, 91 வீரர்கள், 52 வீராங்கனைகள் என, 143 பேர் பங்கேற்க உள்ளனர்.சங்க செயலாளர் வேலுசாமி, மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி ஆகியோரது தலைமையிலான வீரர், வீராங்கனைகள் இன்று, மங்களூர் செல்கின்றனர்.