மேலும் செய்திகள்
இன்று இனிதாக........
03-Dec-2024
- நிருபர் குழு -பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களுக்கு சென்று மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவிலில், ஆங்கில புத்தாண்டையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றன. பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிவ பெருமான் தங்க கவச அலங்காரத்திலும்; விசாலாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவில், கடைவீதி பாலகணபதி கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. வால்பாறை
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டையொட்டி நேற்று காலை, 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் தேவியருடன் அருள்பாலித்தார்.வால்பாறை அண்ணாநகர் மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவில், வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவில், காமாட்சியம்மன்கோவில், கருமலை பாலாஜிகோவில், சோலையார் சித்திவிநாயகர் கோவில்களில், புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. உடுமலை
உடுமலை சுற்றுப்பகுதிகளில், ஆங்கில புத்தாண்டு தினம், நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டும், மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்றனர். நேற்று அதிகாலை, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.பிரசன்ன விநாயகர் கோவிலில், பால், தயிர், பன்னீர், இளநீர் என சுவாமிக்கு பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் நடந்தது. விபூதி அலங்காரத்தில், விநாயகப்பெருமான் அருள்பாலித்தார்.உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. தங்க கவச அலங்காரத்தில், வேங்கடேச பெருமாள் அருள்பாலித்தார். தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில், வெள்ளி கவச அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். ருத்ரப்ப நகர் சித்தி விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தில்லை நகர், சீரடி சாய்பாபா கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன.சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த அமரபுயங்கீஸ்வரர் கோவிலில், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதே சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியிலுள்ள கோவில்களில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.
03-Dec-2024