மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி:
22-Sep-2025
வால்பாறை,; வால்பாறை கக்கன் காலனியில் ஸ்ரீநாராயண குரு சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில் வாரம் தோறும் வியாழக்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இந்நிலையில்,ஸ்ரீநாராயண குரு சுவாமியின் நினைவு நாளையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 9:00 மணிக்கு, சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பஜனை பாடல்களை பாடினர். தொடர்ந்து மதியம், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஸ்ரீநாராயணகுரு தமிழக பேரவையின் மாநில பொதுசெயலாளர் கிருஷ்ணாஸ்சுதீர், வால்பாறை தாலுகா தலைவர் ரவி, செயலாளர் சுரேஷ், பொருளாளர் பிரதீப் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
22-Sep-2025