உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழிலாளர்களுக்கு சிறப்பு பதிவு முகாம்

தொழிலாளர்களுக்கு சிறப்பு பதிவு முகாம்

வால்பாறை: வால்பாறையில், தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை சார்பில், அனைத்து வாகன ஓட்டுநர்கள், துணை ஓட்டுநர்கள், உதவியாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சிறப்பு பதிவு முகாம் நடந்தது. தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் முருகபிரசன்னா, உதவி ஆணையாளர் ரவிக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். முகாமில், விபத்து காப்பீடு 2 லட்சம் ரூபாயக்கான தொழிலாளர் அடையாள அட்டை, பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு திட்டம், அபிஷ்மான் பாரத் மருத்துவமனை கணக்கு அட்டை உள்ளிட்ட பல்வேறு திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு பதிவு நடந்தது. இதில், வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தகுதியானவர்களுக்கு உடனடியாக அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி