உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஈட்டி எறிதலில் வென்ற மாணவி 

ஈட்டி எறிதலில் வென்ற மாணவி 

பொள்ளாச்சி: பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான தடகள போட்டி, கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இப்போட்டியில் குறு மைய அளவிலான போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதன்படி, பொள்ளாச்சி விஸ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆதில், 100 மீ., ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் மூன்றாவது இடம் பிடித்தார். இவரை, பள்ளி முதல்வர் அருட்தந்தை ஜாய் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர். இதேபோல, ஜெ.கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சபீதா, ஈட்டி எறிதலில் இரண்டாமிடம் பிடித்து, மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். இவரை, தலைமையாசிரியர் நீலாவதி, உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ