உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரட்டை கம்பு வீச்சில் கலக்கிய மாணவியர்; வெற்றிவாகை சூடி பள்ளிகளுக்கு பெருமை

இரட்டை கம்பு வீச்சில் கலக்கிய மாணவியர்; வெற்றிவாகை சூடி பள்ளிகளுக்கு பெருமை

கோவை; மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு வீச்சில் மாணவியர் அசத்தினர்.பள்ளிக்கல்வி துறை சார்பில், 40வது கோவை மாவட்ட வருவாய் அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான விளையாட்டு போட்டிகள், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நான்கு நாட்கள் நடந்தது. சிலம்பம், ஜூடோ, குத்துச்சண்டை, வாள்வீச்சு உள்ளிட்ட போட்டிகள் வீரர், வீராங்கனைகளுக்கு தனித்தனியே இடம்பெற்றன.சிலம்பம் போட்டியில், 850 பேர் பங்கேற்றனர். இதில், 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்தினர். 19 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில்(70 கிலோவுக்கும் கீழ்), மேரி பிரியதர்ஷினி முதலிடத்தையும், மித்ரா இரண்டாம் இடத்தையும், பாவனா மற்றும் நித்திய பிரியா ஆகியோர் மூன்றாம் இடங்களையும் பிடித்து பெருமை சேர்த்தனர்.மேலும், 70 கிலோவுக்கும் அதிகமான பிரிவில், சிவசங்கரி, நிரஞ்சனா ஆகியோர் முதல் இரு இடங்களையும், ஹாசினி, இலக்கியா ஆகியோர் மூன்றாம் இடங்களையும் பிடித்தனர். 17 வயதுக்குட்பட்டோர், ஒற்றை கம்பு வீச்சு போட்டியில், அருணா, வைத்தீஸ்வரி ஆகியோர் முதல் இரு இடங்களையும், விஸ்ருதி, மித்ரா ஜோதி ஆகியோர் மூன்றாம் இடங்களையும் பிடித்தனர்.இரட்டை கம்பு வீச்சு போட்டியில், கனிஷ்கா, பிரியதர்ஷினி ஆகியோர் முதல் இரு இடங்களையும், தனுஜா, சந்தியா ஆகியோர் மூன்றாம் இடங்களையும் வென்றனர். 14 வயதுக்குட்பட்டோர் பிரிவு, 30 கிலோவுக்கும் கீழ், ஹர்சிதா, சாய் ஸ்ரீ ஆகியோர் முதல் இரு இடங்களையும், கமலி, லட்சுதா ஆகியோர் மூன்றாம் இடங்களையும் பெற்றனர்.அதேபோல், 35 கிலோவுக்கும் குறைவான எடை பிரிவில், பூஜா, பிரதக்ஷனா ஆகியோர் முதல் இரு இடங்களையும், நிவாசினி, ஹெதன்யா ஆகியோர் மூன்றாம் இடங்களையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவியரை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி