உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுவாமி விவேகானந்தர்பிறந்த தின விழா பேரணி

சுவாமி விவேகானந்தர்பிறந்த தின விழா பேரணி

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தின விழா நடந்தது.விழாவையொட்டி, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரி நிறுவன மாணவர்கள் சாமி செட்டிபாளையத்தில், விவேகானந்தர் ரதத்துடன் தேசிய இளைஞர் தின பேரணியை நடத்தினர். கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு கொடி அசைத்து, பேரணியை துவக்கி வைத்தார். ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தா, மாருதி உடற்கல்வியியல் கல்லூரி செயலாளர் சுவாமி வீரகானந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேரணியை ஒட்டி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை ஒட்டி நடந்த பேச்சு போட்டியில் பரிசு பெற்றவர்கள், தங்களுடைய உரைகளை நிகழ்த்தினர்.இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேரணி மற்றும் நிறைவு விழாவில், பேராசிரியர்கள், வித்யாலயா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை