உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தமிழ்ச்செம்மல் விருது

 தமிழ்ச்செம்மல் விருது

கோவை: தமிழ் வளர்ச்சி துறை சார்பில், 2015 முதல் ஆண்டுதோறும் தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து தலா ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, ரொக்கப் பரிசு, விருது மற்றும் சான்றிதழ் வழங்கப் படுகிறது. இதுவரை அரியலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 317 பேர் தமிழ்ச்செம்மல் விருது பெற்றுள்ளனர். 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளுக்கான விருது அறிவிக்கப்படாத நிலையில், மூன்று பேர் கொண்ட குழு, அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட விண்ணப்பங் களை தற்போது பரிசீலித்து வருகிறது. அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 4 பேர் உள்பட மாநிலம் முழுவதும் 56க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விரைவில் விருது வழங்கும் தேதி அறிவிக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !