உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணி நிரந்தம் செய்யக் கோரி ஆசிரியர்கள்  ஆர்ப்பாட்டம் 

பணி நிரந்தம் செய்யக் கோரி ஆசிரியர்கள்  ஆர்ப்பாட்டம் 

கோவை ; பகுதி நேர ஆசிரியர்கள் நீண்ட கால கோரிக்கையான, பணி நிரந்தரத்தை வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். மாநிலம் முழுவதும், 2011-12ம் கல்வியாண்டு முதல் அரசு நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது, 12,500 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. பணிநிரந்தம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகள், குறைந்த ஊதியத்தில், எவ்வித சலுகை, பலனும் இன்றி பணியாற்றி வந்தனர். இந்நிலையில், 2016ம் ஆண்டு, கருணாநிதியும், 2021ல் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பணிநிரந்தரம் செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து இருந்தனர். இருப்பினும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் பணிநிரந்தரம் செய்யப்படவேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. இதில், ஒருங்கிணைப்பு குழு மாநில செயலர் ஆனந்தராஜ், பொருளாளர் ஆனந்தகுமார், மாவட்ட செயலாளர் பிரபாகரன், கோவை மாவட்டத்தில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி