மேலும் செய்திகள்
ஓட்டுப்பதிவு இயந்திரம் வருகை
02-Sep-2025
கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை, வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், தேசிய இன்ஜினியர்கள் தினம் கொண்டாடப்பட்டது. வேளாண் நடைமுறைகளை முன்னேற்றுவதில், வேளாண் இன்ஜினியர்களின் பங்களிப்பை நினைவு கூறும் வகையில், 'டெக் ஆன் டிராக்' கண்காட்சி நடத்தப்பட்டது. கல்லுாரி டீன் ரவிராஜ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, டிராக்டர் பேரணி ந டத்தப்பட்டது. இது, மாணவர்களுக்கு நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியது. தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை, பல்கலையின் வேளாண் இயந்திரம் மற்றும் பொறியியல் துறை, பயிர் மேலாண்மை இயக்குனரகம், பயிர் இனப் பெருக்கம் மற்றும் மரபியல் இயக்குனரகம் உள்ளிட்ட துறைகளில் இருந்து, வேளாண் இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
02-Sep-2025