உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேட்டரி கார் வந்தாச்சு!

பேட்டரி கார் வந்தாச்சு!

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவு பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நடந்து சென்று, கோவிலில் தரிசனம் செய்ய சிரமப்படுகின்றனர். அவர்கள் வசதிக்காக, பேட்டரி கார் வாங்க அறங்காவலர் குழு தீர்மானித்தது.இதற்காக, அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் மற்றும் அறங்காவலர்கள், கோவில் நிர்வாகத்தினர், பெடரல் வங்கியை அணுகி மாற்றுத்திறனாளிகள் அழைத்துச் செல்ல பேட்டரி வாகனம் வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.அதன்பேரில், ஆறரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேட்டரி வாகனத்தை, பெடரல் வங்கி சி.எஸ்.ஆர்., நிதியில் கோவிலுக்கு வழங்கியுள்ளது. அறங்காவலர் குழு தலைவரிடம், வங்கி நிர்வாகிகள் பேட்டரி காரை வழங்கினர்.இதன் வாயிலாக, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்ல வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் பேட்டரி வாகனங்கள் வாங்கவும், தன்னார்வலர்களிடம் நன்கொடை வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி