அய்யம்பதி மக்கள் அவதி
கோவை; மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் சார்பில், மாவட்ட துணை செயலாளர் சவுந்தரராஜன் அளித்த மனு: அய்யம்பதி மலைவாழ் மக்கள் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில், கடந்த 48 வருடங் களாக 55 குடும்பங்கள் வசித்து வருகிறோம். வழித்தடத்தில் வன விலங்குகளின் அச்சுறுத்தல் இருப்பதால், கடந்த பல ஆண்டுகளாக போக்குவரத்து வசதி இல்லை. பள்ளி, கல்லுாரி, மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, எங்கள் பகுதிக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.