பண்பாட்டு கல்வியை வழங்காததே இன்று குற்றங்கள் அதிகரிக்க காரணம்
கோவை: சைபர் சொசைட்டி ஆப் இந்தியாவின் கோவை கிளை மற்றும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, காந்திபுரம் ஆர்.வி., ஓட்டலில் நடந்தது.கருத்தரங்கில், பாரதியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் இளங்கோ பேசியதாவது:உலகளவில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றால், அதற்கு முறையான கல்வி இல்லாததே காரணம். பண்பாட்டு கல்வியை நாம் மாணவர்களுக்கு வழங்கவில்லை.ஆசிரியர்கள் மீது, மாணவர்களுக்கு பயம் இல்லை. இன்று தரமில்லாத கல்வியே உள்ளது. ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி இல்லை. மனதில் பதியக்கூடிய காலத்தில், மாணவர்களுக்கு பயனுள்ள கல்வி போதிக்கப்படுவதில்லை.சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம். இந்தியாவில் மாதந்தோறும், 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, மோசடி நடக்கிறது. இளைய தலைமுறையினர் நல்வழிப்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, சைபர் சொசைட்டி ஆப் இந்தியாவின் மாநிலத்தலைவர் விஜயகுமார் வரவேற்றார். செயலாளர் பாலு சுவாமிநாதன், கோவை கிளைத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.