உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தப்பாகி போனதே இந்த கணிதப்பூங்கா

தப்பாகி போனதே இந்த கணிதப்பூங்கா

கோவை: தி.மு.க. ஆட்சியில் மாநகராட்சி சார்பில் வ.உ.சி. பூங்கா அருகே 50 சென்ட் பரப்பில் ரூ.54 லட்சத்தில் கணிதப்பூங்கா அமைக்கப்பட்டது. மாணவர்களுக்கு வகுப்பறை படிப்பைத் தாண்டி, செய்முறை வடிவில் கணிதத்தைக் கற்றுத் தருவதே இதன் நோக்கம். ஜியோமெட்ரி, முக்கோணவியல், எண் கணிதம் போன்ற பல்வேறு கணிதக் கோட்பாடுகளை விளக்கும் வகையில் கணித மாதிரிகள், புதிர்கள் மற்றும் விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இதன் வளாகத்தில் உள்ள அறையில், தற்காலிகமாக சுகாதார ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டது. அதுவரை மக்கள் நடமாட்டம் இருந்தது; பராமரிப்பும் இருந்தது. ரேஸ்கோர்ஸ்க்கு அலுவலகம் மாற்றப்பட்டதும் இப்பூங்கா பயன்பாடில்லை. எந்நேரமும் பூட்டிக் கிடக்கிறது. மரத்தில் இருந்து உதிர்ந்த காய்ந்த இலைகளை அள்ளுவதற்கு மட்டும் ஊழியர்கள் வந்து செல்கின்றனர். செடிகள் காய்ந்து விட்டன. கணித விளையாட்டு உபகரணங்கள் பயன்பாடின்றி உள்ளன. சிறுவர் ரயில் பூங்காவில் நீச்சல் குளம் கட்டுவதற்கு குழி தோண்டிய போது, அள்ளிய மண் வளாகத்துக்குள் சிதறிக் கிடக்கிறது.

செய்ய வேண்டியதென்ன?

கணிதப்பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்; தினமும் எப்போது திறந்திருக்கும் என்கிற அறிவிப்பு வைக்க வேண்டும் அல்லது வ.உ.சி. தாவரவியல் பூங்கா வழியாக இவ்வளாகத்துக்குள் வந்து செல்ல வழியேற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை