உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி

வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி

கோவை; 2024-25ம் நிதியாண்டுக்கான வருமான ரிட்டன் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இறுதி நாளை நீட்டிக்க வாய்ப்புகள் குறைவு என்பதால், இதுவரை தாக்கல் செய்யாதவர்கள், அபராதத்தைத் தவிர்க்க இன்றே தாக்கல் செய்வது நல்லது. வருமான வரி தாக்கல் செய்ய வழக்கமாக, ஜூலை 31ம் தேதி இறுதி நாளாக இருக்கும். நடப்பு ஆண்டு, செப்., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பொதுவாக, வருமான வரி வரம்பின் கீழ் வராதவர்கள், தாக்கல் செய்ய வேண்டியதில்லை எனக் கருதுவர். வருமான வரி தாக்கல் செய்வதால், எளிதான வங்கிக் கடன் உள்ளிட்ட நன்மைகள் உள்ளன. ஒருவரின் ஆண்டு வருவாய் ரூ. 5 லட்சத்துக்கு மேல் இருப்பின், உரிய காலத்தில் வருமான வரி படிவத்தைத் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். இன்றுதான் கடைசி நாள் என்பதால் இதுவரை தாக்கல் செய்யாதவர்கள், உடனடியாக தாக்கல் செய்து கொள்ளலாம். ஆடிட்டர் ஜலபதி கூறுகையில், “மத்திய வருமான வரித்துறை தாமாக முன்வந்து செப்., 15ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்தது. தொழில்நுட்ப குறைபாடுகள், புதிய மென்பொருள் அப்டேட் போன்றவை காரணமாக இந்த அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள், உடனடியாக தாக்கல் செய்வது நல்லது. வீண் தாமதக் கட்டணத்தைத் தவிர்க்கலாம்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை