உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சி சேவை மையங்களில் இன்று பாரம்பரிய உணவுத்திருவிழா

ஊராட்சி சேவை மையங்களில் இன்று பாரம்பரிய உணவுத்திருவிழா

கோவை : கிராமப்புறங்களில் வசிக்கும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர் போதிய ஊட்டச்சத்து இல்லாமல், பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள்.இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில், ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 'ரத்த சோகை இல்லாத கிராமம்' குறித்து, சிறப்பு பிரசாரம் மற்றும் பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளன.அனைத்து ஊராட்சி சேவை மையங்களில், இன்று ஊராட்சி அளவிலான பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டி நடத்தப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கலாம். வெற்றி பெறும் மகளிர் குழுவினருக்கு முதல் பரிசாக ரூ.300, இரண்டாம் பரிசாக ரூ.200, மூன்றாம் பரிசாக ரூ.100 வழங்கப்படும்.அனைத்து வட்டார இயக்க மேலாண்மை அலுவலகம்/ வானவில் மையங்களில் வட்டார அளவில் போட்டி நடத்தப்படும். இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.2,500, இரண்டாம் பரிசாக பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1,500 வழங்கப்படும்.மாவட்ட அளவிலான போட்டி, கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அக்., 8ல் நடத்தப்படும். அனைத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், மகளிர் சுய உதவி குழுக்கள் பங்கேற்கலாம்.முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.4,000, மூன்றாம் பரிசு ரூ.3,000 வழங்கப்படும் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி