உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை) அக்டோபர் 22

இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை) அக்டோபர் 22

ஆன்மிகம் கந்த சஷ்டி விழா * திருச்செந்தில் கோட்டம், ஈச்சனாரி, கச்சியப்பர் மடாலயம். கணபதி வேள்வி, கொடியேற்றம், காப்புக்கட்டும் நிகழ்வு, காலை 8 மணி. ஏற்பாடு: கச்சியப்பர் மடாலய சேரிடபுள் டிரஸ்ட். * பாலதண்டாயுதபாணி கோவில், சுக்கிரவார்பேட்டை. காப்புக்கட்டுதல், வேள்வி பூஜை, காலை 6 மணி. * சுப்பிரமணியசுவாமி கோவில், மசக்கவுண்டன் செட்டிபாளையம், அன்னுார். ஐங்கரன் வேள்வி, காப்பு நாண் வழிபாடு, காப்பு நாண் அணிவித்தல், காலை 6 மணி. முருகனுக்கு முதற்கால வேள்வி, மாலை 5 மணி. கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண் டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி. மண்டல நிறைவு வழிபாடு மதுரகாளியம்மன் கோவில், ஓதிமலை ரோடு, இலக்கேபாளையம், அன்னுார். வேள்வி வழிபாடு, 108 சங்கு பூஜை, மகா அபிஷேகம், சங்கு அபிஷேகம், திருக்குட நீராட்டு, அலங்கார பூஜை, பேரொளி வழிபாடு, அன்னதானம், காலை 6 முதல் மதியம் 12 மணி வரை. சண்டி மஹா ஹோமம் சிவகுரு மகாவிஷ்ணு சேசத்ரம், கே.என்.ஜி. புதுார், தடாகம் ரோடு. சக்கர நவாவரண பூஜை, காலை 9 முதல் 11 மணி வரை. சண்டி ஹோமம், மாலை 5 முதல் இரவு 8 மணி வரை. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7:30 மணி மற்றும் மாலை 6 மணி. பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல், 8.30 மணி வரை. * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல், 8. 30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி