உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

தைப்பூசத் திருவிழா

மருதமலை, சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூசத்திருவிழா நடந்து வருகிறது. அபிஷேகம் பூஜை, தீபாராதனை, புலி வாகனத்தில் திருவீதி உலா காலை, 9:00 மணி முதல் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல், யாகசாலை பூஜை, அபிஷேகம் பூஜை, தீபாராதனை, பூதவாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு, பூஜைகளை தொடர்ந்து பல்லக்கில், சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

கீதாதான்

இஸ்கான் அமைப்பு சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கீதாதான் நிகழ்ச்சி நடக்கிறது. கீதையின் மதிப்புகள் என்ற தலைப்பில், படைப்பாறறல் கொண்ட போஸ்டர்கள் வரைதல், வினாடி - வினா போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். உப்பிலிபாளையம், சாய் விவாக மஹாலில், காலை, 10:00 முதல் 1:00 மணி வரை நடக்கிறது.

சங்கர விஜயம்

ராம்நகர், கோதண்டராமர் கோவிலில், விஷேச பூஜைகள், ஹோமங்கள், சொற்பொழிவு மற்றும் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இன்று, 'சங்கர விஜயம்' என்ற தலைப்பில் சொற்பொழி, மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது.

தேர்த்திருவிழா

சரவணம்பட்டி, கவுமார மடாலயம் தண்ட பாணிக் கடவுள் கோவிலில், தைப்பூசத் தேர்த்திருவிழா நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் விநாயகர் வேள்வி, பூஜை நடக்கிறது. மாலை, 6:30 மணி முதல் நிலத்தேவர் வழிபாடு நடக்கிறது.

கம்பன் விழா

கோவை கம்பன் கழகத்தின் சார்பில் 53ம் ஆண்டு கம்பன் விழா, பாப்பநாயக்கன்பாளையம், மணி மேல்நிலைப்பள்ளியில், மாலை, 5:45 மணிக்கு நடக்கிறது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல், மலர் வெளியீடு மற்றும் இலக்கியப் பேரூரை ஆகிய நிகழ்வுகள் நடக்கின்றன.

பக்தி இன்னிசை

மலுமிச்சம்பட்டி, ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலத்தில் சத்சங்கம் நடக்கிறது. இன்று, மாலை, 5:00 முதல் மாலை, 6:30 மணி வரை பக்தி இன்னிசை நடக்கிறது. அரசு இசைக்கல்லுாரி மாணவர்கள், இன்னிசையை நிகழ்த்துகின்றனர்.

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பாராட்டு

ஒத்தக்கால்மண்டபம், இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் இஸ்ரோ துணை திட்ட இயக்குனர் பிரபுவிற்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதில், விஞ்ஞானி பிரபு, மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்கிறார்.

விளையாட்டு விழா

வெள்ளக்கிணறு, வேலம்மாள் போதி கேம்பசில், மூன்றாம் ஆண்டு விளையாட்டு விழா காலை, 8:30 மணிக்கு, பள்ளி வளாகத்தில் நடக்கிறது. முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ராமன் விஜயன், சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

சாலைப்பாதுகாப்பு ஹேக்கத்தான்

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாநகர காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு ஹேக்கத்தான் நடக்கிறது. குனியமுத்துார், ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.

தேசிய கருத்தரங்கு

ஒத்தக்கால்மண்டபம், இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், கட்டுமான பொறியியல் துறை சார்பில், காலை, 10:00 மணிக்கு தேசிய கருத்தரங்கு நடக்கிறது. 'கான்கிரீட் கலை கட்டமைப்பு மற்றும் மீள்தன்மைக்கான சிறந்த நடைமுறைகள்' என்ற தலைப்பில், வல்லுனர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

இசை மெல்லிசைகள்

பச்சாபாளையம், பேரூர் செட்டிபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில், இசை பயிலரங்கு காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. 'இணக்கமான மெல்லிசைகள்' என்ற தலைப்பில், இசை பயிற்றுனர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

தொடர்ச்சியான சிகிச்சை மூலம், குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.

மலர் கண்காட்சி

வேளாண் பல்கலை, தோட்டக்கலைத் துறை சார்பில், தாவரவியல் பூங்காவில் 7வது மலர் கண்காட்சி இன்று துவங்குகிறது. லட்சக் கணக்கான மலர்களைக் கொண்டு, பல்வேறு விதமான வடிவங்களில் பார்வையாளர்ளைக் கவரும் விதத்தில் பூக்கள் அலங்கார வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ