உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி.மு.க., அரசை கண்டித்து த.வெ.க.,ஆர்ப்பாட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து த.வெ.க.,ஆர்ப்பாட்டம்

கோவை; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., ஆட்சியை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.கோவை செஞ் சிலுவை சங்கம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கோவை மாநகர மாவட்ட செயலாளர் சம்பத்குமார் தலைமை வகித்தார்.சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து, கட்சியினர் பதாகைகளை ஏந்தினர்.சம்பத்குமார் கூறுகையில்,''தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. மாதந்தோறும் மின்கட்டணம் வசூலிக்கப்படும் என, கூறப்பட்டது. ஆனால், இதுவரை அது மேற்கொள்ளப்படவில்லை. கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்தவர்கள் அதை நிறைவேற்றவில்லை. 'நீட்' தேர்வு எதிர்ப்பு விஷயத்தில் பெரியளவில் தி.மு.க., போராடவில்லை,'' என்றார்.ஆர்ப்பாட்டத்தில், மகளிர் அணி, இளைஞரணி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை