மேலும் செய்திகள்
பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி
16-Feb-2025
கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி வரும் 18, 19ம் தேதி நடக்கிறது.கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு, போன்றவை மக்களால் ஓரளவு உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. நகர்ப்புறங்களில் கேழ்வரகு மட்டும் பயன்பாட்டில் உள்ளது.சிறுதானிய வகைகளில் உள்ள சத்துகளையும் அவற்றை உபயோகித்து, பாரம்பரிய உணவுகள், பிழிதல், பேக்கரி பொருட்கள், உடனடி தயார் நிலை உணவு தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும்.ஆர்வம் உள்ளவர்கள், பயிற்சிக் கட்டணமாக, வரிகள் உட்பட ரூ.1, 770 செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு அறுவடைபின்சார் தொழில்நுட்ப மையத்தை, 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
16-Feb-2025