உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  டாக்ஸி டிரைவரை தாக்கிய இருவர் சிறையிலடைப்பு

 டாக்ஸி டிரைவரை தாக்கிய இருவர் சிறையிலடைப்பு

கவுண்டம்பாளையம்: கவுண்டம்பாளையம் குரும்பபாளையம் சிந்தாமணி நகரை சேர்ந்தவர் வேல்முருகன், 44; கால் டாக்ஸி ஓட்டி வருகிறார். வேடப்பட்டி வழியாக, கவுண்டம்பாளையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கவுண்டம்பாளையம் ஆர்.டி.ஓ.,அலுவலகம் அருகில், முன்னால் சென்ற வாகனம் திடீரென நிறுத்தப்பட்டது. வேல்முருகனும் தனது காரை நிறுத்தினார். அவருக்கு பின்னால் பைக்கில் வந்த வாலிபர், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கார் மீது மோதினார். வேல்முருகனுடன் வாக்குவாதம் செய்து தாக்கினார். போனில் அவரது நண்பர்களை வரவழைத்தார். அவர்களும் வேல்முருகனை தாக்கினர். அச்சமடைந்த வேல்முருகன் காருக்குள் ஏறி அமர்ந்தார். இருந்தும் விடாமல், இரும்பு கம்பியால் வேல்முருகனை தாக்கி, கார் கண்ணாடியையும் உடைத்தனர். வேல்முருகன் ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வருவதை அறிந்த அக்கும்பல் தப்பியது. வழக்கு பதிந்த கவுண்டம்பாளையம் போலீசார் விசாரித்து, கவுண்டம்பாளையம் மாசிலாமணி, 29, அவரது நண்பர் ஹரிஷ், 28 ஆகியோரை சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ