போதை மாத்திரை விற்ற இரு இளைஞர்கள் கைது
போத்தனுார்; கோவை, கரும்புக்கடை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.ஜோசப் ஆத்துப்பாலம் மின் மயானம் அருகே ரோந்து சென்றார். சந்தேகம் அளிக்கும் வகையில் நின்றிருந்த இருவரை விசாரித்தார். குனியமுத்துார் திருவள்ளுவர் நகரை சேர்ந்த முஹமது ஆசிப், 25, உக்கடம், வின்சென்ட் ரோடு ஹவுஸிங் யூனிட்டை சேர்ந்த முஹமது தாரிக், 25 என தெரிந்தது. இருவரும் விற்பனைக்காக, போதைக்கு பயன்படுத்தும் மாத்திரைகள் 120 மற்றும் 100 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.