UPDATED : செப் 08, 2026 06:06 PM | ADDED : செப் 08, 2026 06:01 PM
1. சாலையில் குவியும் குப்பை இடையர்பாளையம், தடாகம் ரோடு, பாரி நகரில் ரோட்டோரத்தில் குப்பை குவிந்து கிடக்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரப் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. -தியாகராஜன்: 2. மாசாகும் குளம் பேரூர் பெரியகுளக்கரையில் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படும் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் நீர்நிலை பாதிக்கப்படுகிறது. -கிருஷ்ணா: 3. சாலையை சீரமைக்க வேண்டும் மருதமலை முதல் வடவள்ளி வரையிலான ரோட்டில், மழைநீர் வடிநீர் கால்வாய் பணி முடிந்து ஒரு மாதமாகி விட்டது. ரோடு சீரமைக்காததால் சேறும் சகதியுமாக உள்ளது. - கணேசன்: 4. ஒளிரா விளக்கு ராமநாதபுரம், நடராஜ் தேவர் காலனியில் தெரு விளக்கு எரியாததால், இரவில் ரோட்டில் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. -வீராசேகர்: 5. துருப்பிடிக்கும் திருகுகள் சாய்பாபா காலனியில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட புதிய பாலத்தின் மின்கம்பத்தின் இரும்புத் திருகுகள் துருப்பிடித்து வருகிறது. -பிரியா: 6. கால்வாயை அடைக்கும் குப்பை சின்னவேடம்பட்டி, குறிஞ்சி நகர் செல்லும் வழியில் உள்ள மழைநீர் வடிகாலில், பல நாட்களாக பிளாஸ்டிக் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் மழைநீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளது. -ரவி சந்திரன்: 7. சாலையில் கழிவுநீர் தியாகி ஜெகநாதன் காலனியில் தனிநபர் ஒருவர் வீட்டின் கழிவுநீரை வெளியேற்ற ரோட்டை தோண்டி சேதப்படுத்தியுள்ளார். மழைக்காலங்களில் கழிவுகள் சாலையில் மிதக்கும் நிலை உள்ளது. - மோகன்ராஜ்: 8. உடைந்த பாதாளச் சாக்கடை விளாங்குறிச்சி, 4-வது வீதி, அண்ணா நகரில் பாதாளச் சாக்கடை உடைந்து பல மாதங்களாகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. -மணி: 9. தேங்கும் கழிவுநீர் சாய்பாபா காலனி பாலத்தின் கீழ், பெரியார் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய் முறையாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. மழை பெய்யும்போது கழிவுநீருடன் மழைநீரும் தேங்கி நிற்கிறது. -தேவ்: 10. சுகாதார சீர்கேடு உப்பிலிபாளையத்தில், 'குப்பை கொட்டக்கூடாது' என அறிவிப்பு வைக்கப்பட்டுள்ள இடத்திலேயே தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. - கிரிபிரசாத்: