தடுப்பூசி போட விழிப்புணர்வு
காரமடை: சிக்காரம்பாளையம் ஊராட்சியில், சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மைக்கேல், கூடுதல் இயக்குனர் (சென்னை) கவிதா ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக கலந்துக் கொண்டனர். சீமை கருவேலமரங்களை அகற்றுதல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்திக்கொள்வது தொடர்பாக 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஊராட்சி செயலாளர் ராஜேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுபா, உமா, வி.ஏ.ஓ., மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.