உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கணுவாய் அருகே வாகனம் கவிழ்ந்து விபத்து

கணுவாய் அருகே வாகனம் கவிழ்ந்து விபத்து

பெ.நா.பாளையம் ; கணுவாய் அருகே உள்ள சோமையனுார், துளசிமணி என்பவருக்கு சொந்தமான ஐஷர் வாகனம் ஒன்று, நேற்று முன்தினம் சத்தியமங்கலத்தில் இருந்து பன்னிமடைக்கு பசுந்தீவனம், மாட்டு தீவனம் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வந்தது. லாரியை, இடையர்பாளையம் சண்முகசுந்தரம்,45, ஓட்டி வந்தார். மேட்டுப்பாளையம் ரோடு, பெரியநாயக்கன்பாளையம் காஸ் கம்பெனி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, பின்னால் வந்த பஸ்சுக்கு வழி விட, ஐஷர் வாகனம் வலது பக்கமாக திரும்பிய போது, நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை