வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், மாதவா இன் ஹால் முதல் தளத்தில் வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் இரு நாட்கள் கண்காட்சி நேற்று துவங்கியது. பிரத்யேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகைகளின் தொகுப்பு, பழங்கால, பாரம்பரிய வடிவமைப்பு கொண்ட நகைகள் மற்றும் மணப்பெண்ணுக்கான நகைகள், நவீன வைர நகைகள், கைவினை திறனுடன் வடிவமைக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. வி.பி.ஜே. நிர்வாக இயக்குநர்கள் அமரேந்திரன் உம்மிடி, ஜிதேந்திர உம்மிடி கூறுகையில், 'கண்காட்சியில், பாரம்பரியத்துக்கும், நவீனத்துவத்திற்கும் மதிப்பளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நகைகள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் பார்லிமென்ட் கட்டடத்தை அலங்கரிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோலை உருவாக்கிய பெருமையும் கொண்டிருக்கிறது,' என்றனர். இக்கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. இன்று காலை, 11:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கிறது.