மேலும் செய்திகள்
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
02-Sep-2025
அன்னுார்; அ.மேட்டுப்பாளையம் ஊராட்சி, இடையர்பாளையத்தைச் சேர்ந்த கிராம மக்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மகேஸ்வரியிடம் நேரில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது : எங்கள் ஊரில் வீடு மற்றும் பொது குழாய்களில் ஆற்று நீர் மற்றும் போர்வெல் நீர் வழங்குவதில் குளறுபடிகள் உள்ளன. மேலும் குடிநீர் வினியோகம் முறையாக செய்வதில்லை. எனவே மோட்டார் ஆபரேட்டரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். தங்கு தடை இன்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நபருக்கு மட்டும் அதிக அளவில் குடிநீர் செல்வதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
02-Sep-2025