உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொடர் மழையால் நொய்யலில் நீர் வரத்து

தொடர் மழையால் நொய்யலில் நீர் வரத்து

தொண்டாமுத்தூர்: மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மூன்று மாதங்களாக வறண்டு கிடந்த நொய்யல் ஆற்றில், நீர்வரத்து துவங்கியுள்ளது.கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து நூற்றுக்கணக்கான ஓடைகள் இணைந்து, தொம்பிலிபாளையத்தில் உள்ள கூடுதுறை என்னும் இடத்தில் நொய்யல் ஆறு உருவாகி, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக கரூரில் காவிரியில் கலக்கிறது.நொய்யல் ஆற்றின் மூலமே, கோவையில் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. குளம், குட்டைகளுக்கும் நீராதாரமாக உள்ள நொய்யல் ஆறு, கோவையின் ஜீவ நதியாக உள்ளது.மழைப்பொழிவு இல்லாததால், கடந்த மூன்று மாதங்களாக நொய்யல் ஆறு வறண்டு காணப்பட்டது. குளம், குட்டைகளிலும், வெகுவாக நீர் வரத்து குறைந்து வந்தது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த ஒரு வாரமாக, சாரல் மழை பெய்து வந்தது.கடந்த, 2 நாட்களாக, இடைவிடாமல் தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக, நேற்று காலை முதல், நொய்யல் ஆற்றில் நீர்வரத்து துவங்கி உள்ளது. தொடர்ந்து, மேற்கு தொடர்ச்சி மலையில், மழை பெய்து வருவதால், விரைவில் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை