மேலும் செய்திகள்
10 ஆண்டுகளாக பஸ் இயக்காததால் அதிருப்தி
15-Sep-2025
வால்பாறை, ; வேவர்லி எஸ்டேட் பகுதியில், பகல் நேரத்தில் குடியிருப்பு அருகே உலா வரும் காட்டுமாடுகளால், தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர். வால்பாறை அடுத்துள்ளது வேவர்லி எஸ்டேட். இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், சமீப காலமாக இந்த எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் நடமாடுகின்றன. சில நேரங்களில் ரோட்டில் நடந்து செல்பவர்களையும், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களையும் வனவிலங்குகள் தாக்குகின்றன. கடந்த மாதம் வனவிலங்கு தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்நிலையில், வேவர்லி எஸ்டேட் பகுதியில் தற்போது காட்டுமாடுகள் அதிகளவில் நடமாடுகின்றன. தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்திலேயே காட்டுமாடுகள் உலா வருவதால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பீதியடைந்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் தொழிலாளர் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளதால், காட்டுமாடுகள் நடமாடுகின்றன. குழந்தைகள் மாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குடியிருப்பு பகுதிக்கு குறுக்கு வழித்தடத்தில் குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். தொழிலாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பும் போது, தனியாக செல்லாமல் கூட்டமாக செல்வது, பாதுகாப்பாக இருக்கும். காட்டுமாடுகள் நடமாட்டம் இருந்தாலும், இது வரை யாரையும் தாக்கியதில்லை. தொழிலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.
15-Sep-2025