உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய முயற்சிகளை தொடர வேண்டும்

புதிய முயற்சிகளை தொடர வேண்டும்

கோவை, ; ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லுாரியின், 20வது பட்டமளிப்பு விழா கோவை எஸ்.என்.ஆர்., கலையரங்கத்தில் நடந்தது. எஸ்.என்.ஆர்., அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.மதுரை எம்.எஸ்.ஆர்., பல் மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் டாக்டர் பிரகாஷ், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.அவர் பேசுகையில், '' பட்டம் பெற்ற மாணவர்கள் புதிய முயற்சியை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். உறவினர், நண்பர் வட்டத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்,'' என்றார்.இவ்விழாவில், 93 மாணவர்கள் இளங்கலை பட்டமும், ஒன்பது மாணவர்கள் முதுகலை பட்டமும் பெற்றனர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு, 12 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. 'பெஸ்ட் அவுட்கோயிங்' மாணவருக்கான தங்கப்பதக்கம், இளங்கலை மாணவி ஸாதிகாவிற்கு வழங்கப்பட்டது.நிர்வாக அறங்காவலர் சுந்தர், ராமகிருஷ்ணா பல்மருத்துவ கல்லுாரி முதல்வர் தீபானந்தன், பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை