உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தாம்பரம் - கோவை இடையே வாரந்திர சிறப்பு ரயில்; பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக இயக்கம்

தாம்பரம் - கோவை இடையே வாரந்திர சிறப்பு ரயில்; பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக இயக்கம்

பொள்ளாச்சி : சென்னை தாம்பரம் - கோவைக்கு, பொள்ளாச்சி வழியாக வரும், 11ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டுமென பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி அளித்து வருகிறது. அதில், சென்னை தாம்பரத்தில் இருந்து, கோவைக்கு ரயில் இயக்கப்படுகிறது.வரும், 11ம் தேதி முதல் நவ., 29ம் தேதி வரை எட்டு முறை இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், அதே போன்று, கோவையில் இருந்து தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வரும், 13ம் தேதி முதல், டிச.,1ம் தேதி வரை எட்டு முறை இயக்கப்பட உள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.தாம்பரத்தில் இருந்து, மாலை, 6:00 மணிக்கு கிளம்பும் ரயில், செங்கல்பட்டு, மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி வழியாக உடுமலைக்கு, காலை, 5:23 மணிக்கு வந்து, அங்கு இருந்து, 5:25 மணிக்கு கிளம்புகிறது.பொள்ளாச்சிக்கு, 6:22 மணிக்கு வரும் ரயில், 6:25 மணிக்கு கிளம்புகிறது. கிணத்துக்கடவுக்கு, 6:49 மணிக்கு சென்று, 6:40 மணிக்கு கிளம்பி, 7:13 மணிக்கு போத்தனுார் சென்று, 7:15 மணிக்கு கிளம்பி, கோவைக்கு, 8:10 மணிக்கு சென்றடைகிறது.ஞாயிற்றுக்கிழமையில் கோவையில் இருந்து இரவு, 11:45 மணிக்கு கிளம்பும் ரயில், போத்தனுார், 11:57 மணிக்கு வந்து, 11:58 மணிக்கு கிளம்பி, கிணத்துக்கடவுக்கு, 12:22 மணிக்கு வந்து, 12:23 மணிக்கு புறப்படுகிறது.பொள்ளாச்சிக்கு இரவு, 12:47 மணிக்கு வந்து, 12:50 மணிக்கு கிளம்பி, உடுமலைக்கு நள்ளிரவு, 1:13 மணிக்கு செல்கிறது. அங்கு இருந்து, 1:15 மணிக்கு கிளம்பி, மறு நாள் (திங்கள் கிழமை) மதியம், 12:30 மணிக்கு சென்றடைகிறது.இந்த ரயிலில், இரு டயர் ஏசி கோச் ஒன்றும், த்ரி டயர் ஏசி கோச் இரண்டும்; 12 படுக்கை வசதி, இரண்டாம் வகுப்பு கோச் 3, இரண்டாம் வகுப்பு லக்கேஜ் 2ம் உள்ளன. இந்த ரயில் இயக்கத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மக்கள் பயன்படுத்தணும்!

பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறுகையில், 'சென்னை தாம்பரம் - கோவை (பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக) வாராந்திர சிறப்பு ரயில் வரும், 11ம் தேதி முதல் டிச., 1ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.இந்த ரயிலை, மக்கள் அதிகம் பயன்படுத்தினால் நிரந்தரமாக தினமும் இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வரும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kundalakesi
அக் 09, 2024 17:42

ஏழை மக்களுக்கு இது வர பிரசாதம்


SUBBU
அக் 09, 2024 11:11

வேஸ்ட். இந்த ரயில் பொள்ளாச்சி, palani, dindugul, trichy விழுப்புரம் வழியாக இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரயில்வே நிர்வாகம் வேண்டும் என்ற பொள்ளாச்சி பகுதி வாழ் மக்களுக்கு அநீதி இழைக்கிறது.