குமரகுரு கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
கோவை; குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரியில், உயர்கல்வியைத் தொடரும் 42வது பேட்ஜ் மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியான 'ஸ்வாகதம்' நடந்தது. குமரகுரு நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''இந்தியாவின் மக்கள் தொகையில் 60 முதல் 65 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளனர். இளைஞர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதே, நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளது. உயர்ந்த லட்சியத்துடன் மாணவர்கள் முன்னேற வேண்டும்,'' என்றார். குமரகுரு நிறுவனங்களின் தாளாளர் பாலசுப்பிரமணியம், தலைவர் சங்கர் வாணவராயர், நிர்வாகிகள், குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரியின் முதல்வர் எழிலரசி, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.