உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர், யு.ஜி.டி.க்கு தோண்டிய சாலைகளை எப்ப சீரமைப்பாங்களோ! விபத்தும் உயிரிழப்பும் தினமும் அதிகரிக்கிறது

குடிநீர், யு.ஜி.டி.க்கு தோண்டிய சாலைகளை எப்ப சீரமைப்பாங்களோ! விபத்தும் உயிரிழப்பும் தினமும் அதிகரிக்கிறது

கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர், பாதாள பணிக்காக தோண்டப்பட்ட ரோடுகளால், வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சிங்காநல்லுார்-காமராஜர் ரோடு விபத்துகளுக்கு வழிவகுத்து வருகிறது. கோவை மாநகராட்சி சார்பில், 17 ஆயிரத்து, 911 எண்ணிக்கையில், 2,659.67 கி.மீ., நீளம் தார் ரோடு, 3,037 எண்ணிக்கையில், 294.05 கி.மீ.,க்கு சிமென்ட் ரோடு, 1,820 எண்ணிக்கையில், 258.87 கி.மீ., நீளம் மண் ரோடுகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த ரோடுகளில், 24 மணிநேர குடிநீர், பாதாள சாக்கடை போன்ற பணிகளுக்காக தோண்டப்படுகின்றன. தோண்டுவதற்கு காட்டப்படும் வேகம், பணிகள் முடிந்தவுடன் மீண்டும் ரோடு போடுவதில் காட்டப்படுவதில்லை. இந்த அவலத்தால் வாகன ஓட்டிகள் உயிரிழக்கும் பரிதாபமும் தொடர்கிறது. குறிப்பாக, திருச்சி ரோடு, சிங்காநல்லுார்-காமராஜர் ரோட்டில், 24 மணிநேர குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. பணிகள் முடிந்து பல மாதங்களாகியும், ரோடு போடாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். திருச்சி ரோடு, சிங்காநல்லுாரில் இருந்து ஒண்டிப்புதுார் வரை, 4 கி.மீ., துாரத்துக்கும், சிங்காநல்லுார்-காமராஜர் ரோடு, 3 கி.மீ., துாரத்துக்கும் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. காமராஜர் ரோட்டில் இருபுறமும் குழாய் பதிக்கப்பட்டதால், ரோடு குதறப்பட்ட நிலையில் காணப்படுகிறது. சிங்காநல்லுாரின் வடக்கே ஹோப் காலேஜ், தெற்கே வெள்ளலுார், திருச்சி ரோடு, ராமநாதபுரம், ஒண்டிப்புதுார் செல்ல காமராஜர் ரோடு பிரதானமாக உள்ளது. தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தும் நிலையில் காலை, மாலை 'பீக்' நேரங்களில் வாகன ஓட்டிகள் குண்டும், குழியுமான ரோட்டில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். வரதராஜபுரம் சந்திப்பு, லயன்ஸ் ஸ்டாப் அருகே என, இக்குறுகிய ரோட்டில் குழந்தைகள், பெண்களுடன் செல்வோர் விபத்துகளை சந்திப்பது அதிகரித்துள்ளது. நேற்று காலை சிங்காநல்லுார் பஸ் ஸ்டாப் எதிரே, இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், விபத்துக்குள்ளாகி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மோசமான ரோடுகளால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பாதசாரிகளும் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவம், மாநகராட்சி பகுதிகளில் அதிகரித்துள்ளது. அப்பாவி மக்கள் உயிரிழப்பை தடுக்க, வளர்ச்சி திட்ட பணிகளை வேகமாக முடிப்பதுடன், ரோடு சீரமைப்பு பணியை உடனுக்குடன் செய்ய வேண்டும். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''காமராஜர் ரோட்டில் குடிநீர் திட்டத்துக்கு குழாய்கள் பதிக்கும் பணி முடிக்கப்பட்டு, நெடுஞ்சாலை துறையினரிடம் ரோடு ஒப்படைக்கப்பட்டு விட்டது. அத்துறையினர் பணி மேற்கொண்டு வருகின்றனர்,'' என்றார். நேற்று காலை சிங்காநல்லுார் பஸ் ஸ்டாப் எதிரே, இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், விபத்துக்குள்ளாகி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மோசமான ரோடுகளால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பாதசாரிகளும் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவம், மாநகராட்சி பகுதிகளில் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை