மேலும் செய்திகள்
தேர்தல் நிதியின் 'சீக்ரெட்!'
03-Dec-2024
கோவை: கோவை முத்தமிழ் அரங்கத்தின், வாராந்திர இலக்கிய சந்திப்பு கூட்டம், ரேஸ்கோர்ஸ் நடைப்பயிற்சி பூங்காவில் நடந்தது. கோவை முத்தமிழ் அரங்க செயலாளர் ராசேந்திரன் தலைமை வகித்தார்.தமிழ் அமுதம் அய்யாசாமி எழுதிய, பாவைக்கதை நுால் வெளியிடப்பட்டது. 'தென்திசை தீபம் சுவாமி சிவானந்த பரமஹம்சர்' என்ற தலைப்பில், முத்தமிழ் அரங்க தலைவர் ராமசாமி பேசியதாவது:சிறந்த சித்தர்கள் வழி, மரபில் வந்தவர் சுவாமி சிவானந்த பரமஹம்சர்.இந்த உலகத்தில் தனியாக மனிதன் என்று ஒரு படைப்பு இல்லை. 'மனிதன்' என்று, நமக்கு நாமே பெயர் சூட்டிக்கொண்டோம் என்பதே, சிவானந்த பரமஹம்சரின் கருத்து.தமிழகத்தில், பழனியில் வாழ்ந்து மறைந்த இவரது சமாதி, கேரளத்தில் உள்ள வடகரையில் உள்ளது. அந்த காலத்தில், கேரளத்தில் இருந்த சமூக ஏற்ற தாழ்வுகளை கண்டித்து, பல சமூக போராட்டங்களை நடத்தியவர் இவர்.வேறுபாடுகளை கடந்து, மனிதர்கள் ஒற்றுமை உணர்வுடன் வாழ வேண்டும் என கூறி வந்தவர் சிவானந்த பரமஹம்சர் சுவாமிகள். அதை நாம் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கவிஞர்கள், எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.
03-Dec-2024