மேலும் செய்திகள்
ரேஷன் அரிசி கடத்தல் 16 பேருக்கு ‘குண்டாஸ்’
22-Nov-2026
பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில், அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க, 11 குழுக்கள் அமைத்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டன. குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறை ஐ.ஜி., சந்தோஷ்குமார் உத்தரவின் பேரிலும், மேற்கு மண்டல (பொறுப்பு) எஸ்.பி., சீனிவாச பெருமாள் மேற்பார்வையிலும், கோவை சரக எஸ்.பி., மரியமுத்து தலைமையில், மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், முரளிதரன் ராஜசேகர் ஆகியோர் தலைமையில், கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், திண்டுக்கல், தேனி, துாத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து, எஸ்.ஐ.,க்கள் அடங்கிய, 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில், ஆனைமலை, பொள்ளாச்சி, மதுக்கரை, கோவை தெற்கு, வடக்கு மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகா உள்ளிட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டோர் வீடுகள் மற்றும் வரலாற்று பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளில் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து கண்காணிப்பட்டது. மேலும், கேரளா மாநில எல்லையொட்டிய சோதனைச்சாவடிகளில், வாகன தணிக்கை செய்யப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் சட்டவிரோதமாக அண்டை மாநிலத்துக்கு கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது, என போலீசார் தெரிவித்தனர். அத்தியவாசிய பொருட்கள் கடத்தல் அல்லது பதுக்கல் தொடர்பாக தகவல் தெரிந்தால், குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், பொது வினியோக திட்ட ரேஷன் அரிசி கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பற்றி தகவல் தெரிவிக்கலாம். இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம் – 94981 74273, முரளிதரன் – 94981 04646, கோவை அலுவலக தொலைபேசி எண் – 93429 60341, பொள்ளாச்சி அலுவலக எண் – 89037 67023, சென்னை தலைமையகத்தை, 1800 599 5950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தெரிவித்தனர்.
22-Nov-2026