மேலும் செய்திகள்
மண்டல அளவிலான கோகோ போட்டி
11-Sep-2025
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா, சுவாமி விவேகானந்தர், 1893ல் சிகாகோவில் நடந்த உலக சர்வ சமய மாநாட்டில் உரையாற்றிய நிகழ்வினை, உலக சகோதரத்துவ தினமாக கொண்டாடி வருகிறது. இதையொட்டி ராமகிருஷ்ண வித்யாலயா ஜி.கே.டி., அரங்கில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே சொற்பொழிவு போட்டிகள் நடந்தன. இதில், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா ஆராய்ச்சி நிறுவனத்தின் உடற்கல்வியியல் மற்றும் யோகா புலத்தின் தலைவர் கிரிதரன் வரவேற்றார். தொடர்ந்து வித்யாலயா பள்ளி, கல்லூரி அளவில் முதல் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு இறுதி சுற்று போட்டிகள் நடந்தன. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர், சுவாமி ஞான பூர்ணானந்தர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். மாருதி உடற்கல்வியில் கல்லூரி முதல்வர் ஜெயபால் நன்றி கூறினார். விழாவில், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட, 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
11-Sep-2025