உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளையாட்டு போட்டியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

விளையாட்டு போட்டியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

நடுவீரப்பட்டு, : கடலுார் மண்டல குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பரிசு பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் கடலுார் குறுவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் அரசு,அரசு உதவி பெறும் பள்ளி,தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். கடலுார் சுற்று பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தினமும் பயிற்சி பெற்று வருகின்றனர்.தனியார் பள்ளிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட விளையாட்டு ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளித்து வருகின்றனர்.ஆகையால் தனியார் பள்ளி மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஆனால் அரசு பள்ளிகளில் பல பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர் பணியிடம் காலியாகவே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.அப்படியே ஆசிரியர் பணியில் இருந்தாலும் ஒரு விளையாட்டு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர்.இந்த நிலையில் தனியார் பள்ளி மாணவர்களுடன் அரசு பள்ளி மாணவர்களும் குறுவட்ட போட்டிகளில் இணையாக விளையாடி வெற்றி பெற்று வருவது பாராட்டத்தக்கது.பல அரசு பள்ளிகளில் விளையாட்டு திடலே இல்லை என்பது குறிப்படத்தக்கது. எனவே சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு போதியளவில் விளையாட்டு மைதானங்களை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என மாணவர்களின் பேற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை