உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜிபே மூலம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவலர் சஸ்பெண்ட்

ஜிபே மூலம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவலர் சஸ்பெண்ட்

கடலுார்: ஜிபே மூலம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவலர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கடலூர் கே என் பேட்டையில் கடந்த 21ம் தேதி போக்குவரத்து காவலர் குகன் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் வந்த நடுவீரப்பட்டை சேர்ந்த தி.மு.க., நிர்வாகியை வழிமறித்து சோதனை செய்துள்ளார். அவரிடம் குடிபோதையில் வாகன ஓட்டி வந்ததாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்காக பத்தாயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.பிறகு பேரம் பேசி 2000 ரூபாய் வரை கேட்டுள்ளார். ஆனாலும் அவரிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார் பிறகு போலீஸ் போக்குவரத்து காவலர் குகன் செல்போனில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்து தி.மு.க., நிர்வாகி 400 ரூபாய் அனுப்பி உள்ளார்.இதை அவர் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். சக கட்சி நிர்வாகிகளுக்கும் இதை அனுப்பி உள்ளார் இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது கடலூர் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார், போக்குவரத்து காவலர் குகனை தற்காலிக பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ