விழிப்புணர்வு முகாம்
கிள்ளை : சிதம்பரம் அடுத்த பூலாமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.தலைமை ஆசிரியை தேவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் ஞானகுமார் பங்கேற்று, சுற்றுச்சூழலை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விளக்கி, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் பாலாம்பிகை, அன்புச்செழியன், சங்கீதா, செல்வநாயகி, ஆனந்தி, காவியா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.