உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் பாலசுப்ரமணியன், விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். சமூக விசாரணை அலுவலர் தினகரன் வரவேற்றார்.அதில், இளஞ்சிறார் நீதி சட்டம், பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு சட்டம் (போக்சோ), குழந்தைகள் திருமண தடைச் சட்டம் ஆகியன குறித்து மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சைல்டு லைன் அணியினர், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி