உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்த்து கருப்பு கொடி

சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்த்து கருப்பு கொடி

விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோட்டேரி ஊராட்சி எல்லையில் உள்ள முந்திரி தோப்பில் 44 கோடி ரூபாய் மதிப்பில் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து உரம், கழிவு நீரை சுத்திகரித்து குடிநீர் அல்லாத பயன்பாட்டிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.இத்திட்டத்தை கடலுாரில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுவதாக தகவல் பரவியது. அதிருப்தியடைந்த அருகில் உள்ள முதனை ஊராட்சி மக்கள், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வீடுகள் தோறும் கருப்பு கொடியேற்றினர். தகவலறிந்த ஊமங்கலம் போலீசார், கிராம மக்களிடம் பேச்சு நடத்தி, கருப்பு கொடிகளை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ