தீ விபத்தில் படகு எரிந்து சேதம்
கடலுார்; கடலுார், எஸ்.புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் ஆறுமுகம்,50. இவருக்குச்சொந்தமான படகை சலங்கை நகர் அருகிலுள்ள கெடிலம் ஆற்றங்கரையில் நிறுத்தியிருந்தார். கடந்த 1ம் தேதி இரவு 11.30மணியளவில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் படகு எரிந்து, வலை, ஜெனரேட்டர், ஜி.பி.ஆர்.எஸ், வாக்கி டாக்கி உள்ளிட்ட 36லட்சத்து 75ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. புகாரின் பேரில் கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.