மேலும் செய்திகள்
வினாயகர் சதுர்த்தி வெகுவிமரிசை
08-Sep-2024
நெய்வேலி: நெய்வேலி சப்த விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள்.நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே அண்ணா கிராமத்தில் உள்ள சப்த விநாயகர் மற்றும் மஹா பெரியவர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. சப்த விநாயகர் கோயிலில் 7 விநாயகர்கள் மூலவர்களாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் கணபதி ஹோமம் ,சகல திரவிய சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாரதனையும் நடந்தது. மாலை மூலவர் சந்தன காப்பு மற்றும் உற்சவர் வீதியுலா சிறப்பாக நடந்தது.என்.எல்.சி., மின்துறை இயக்குநர் வெங்கடாசலம் அவரது மனைவி மற்றும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மட்டுமின்றி கோவில் நிர்வாகக்குழுவின் சார்பில் நெய்வேலி ராஜேஷ் தினமலர் நாளிதழ்களை வழங்கினார்.
08-Sep-2024