உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

பண்ருட்டி, : பண்ருட்டி நகர தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் 72 வது பிறந்த நாள் விழா கொண்டாடினர். விழாவையொட்டி நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமையில் வார்டுகளில் கொடியேற்றி இனிப்புகள், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியை நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். துணை சேர்மன் சிவா, மாவட்ட துணை செயலாளர்கள் ஆனந்திசரவணன், தணிகைசெல்வம், நகர அவை தலைவர் ராஜா, பொருளார் ராமலிங்கம், துணை செயலாளர்கள் சீனுவாசன், சசிகுமார், கவுன்சிலர்கள் சண்முகவள்ளி பழனி, கவுரி அன்பழகன், வழக்கறிஞர் பரணிசந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி